பாபநாசம் அருகே விஷம் குடித்த கிராம நிர்வாக உதவியாளர் மருத்துவமனையில் புதன்கிழமை உயிரிழந்தார்.
ஈச்சங்குடி மாதா கோவில் தெருவை சேர்நதவர் ராஜரெத்தினம் (54). வீரமாங்குடி கிராம நிர்வாக உதவியாளராக பணியாற்றி வந்தார். அடிக்கடி வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்த ராஜரெத்தினம் கடந்த சில தினங்களுக்கு முன் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அருகிலிருந்தவர்கள் ராஜரெத்தினத்தை திருவையாறு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், தீவிர சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் புதன்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து கபிஸ்தலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.