கும்பகோணம் ஒன்றியத்தில் உள்ள 96 சத்துணவு மையங்களுக்கு வியாழக்கிழமை விலையில்லா மிக்ஸி அளிக்கப்பட்டது.
கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வட்டார வளர்ச்சி பணிகளுக்கு ஆய்வு மற்றும் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை பிற்பகல் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய பகுதியில் உள்ள 96 சத்துணவு மையங்களில் உணவருந்தும் குழந்தைகளுக்கு, வரும் காலங்களில் கலவை சாதம் வழங்க ஏதுவாக, விலையில்லா மிக்ஸியை தஞ்சை எம்எல்ஏ ரெங்கசாமி வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கு ஒன்றியக் குழுத் தலைவர் கோவி. மகாலிங்கம் தலைமை வகித்தார்.
ஒன்றியக் குழு துணைத் தலைர் அழகு.த. சின்னையன், முன்னாள் எம்.எல்.ஏ. ராம. ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வட்டார வளர்ச்சி ஆணையர்கள் கீதாரத்தினம், சந்தானகோபாலன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலக பணியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.