சுவாமிமலை ஸ்ரீசுவாமிநாத சுவாமி கோயிலின் சித்திரை தேருக்கு ரூ. 5 லட்சத்தில் பாதுகாப்பு கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோயிலின் துணை ஆணையர் கே.பி. அசோக்குமார் செய்தியாளர்களிடம் கூறியது: இக்கோயிலில் 2 தேர்கள் உள்ளன. இதில் சித்திரை தேர் மிகுந்த கலைநயமிக்கதாகும். இத்தேருக்கு பாதுகாப்பு கொட்டகை அமைக்க இந்து சமய அறநிலையத் துறையின் மாநில ஆணையர் அறிவுறுத்தியிருந்தார். இதையடுத்து, மதுரை திருமங்கலம் கூட்டுறவு சங்கம் மூலம் 14 அடி உயரம் மற்றும் 14 அடி அகலமும் (நான்குபுறமும்) கொண்ட இத்தேருக்கு பாதுகாப்பு கொட்டகை ரூ. 4.99 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ளது என்றார். அப்போது கோயில் உதவி செயற்பொறியாளர் கல்யாணசுந்தரம், மேலாளர் ராமதாஸ் மற்றும் கோயில் அலுவலர் ஆறுமுகம் ஆகியோர் உடனிருந்தனர்.