சுடச்சுட

  

  ஒன்பத்துவேலியில் சோழர்கால அம்மன், சிவலிங்கம் சிலைகள்

  By தஞ்சாவூர்,  |   Published on : 01st February 2014 01:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தஞ்சாவூர் மாவட்டம், ஒன்பத்துவேலி கிராமத்தில் உள்ள அம்மன், சிவலிங்கம் சிலைகள் சோழர் காலத்தைச் சேர்ந்தவை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

  தஞ்சாவூரிலிருந்து 27 கி.மீ. தொலைவில் உள்ளது ஒன்பத்துவேலி. இந்தப் பகுதியிலுள்ள அனைத்து ஊர்களிலும் பல்லவர், முத்தரையர், சோழர், நாயக்கர், மராத்தியர் எனப் பல்வேறு மன்னர்கள் எழுப்பிய மற்றும் புனரமைத்த கோயில்கள், நீர்நிலைகள் உள்ளன. இந்த ஊர் குறித்து அண்மையில் சரசுவதி மகால் நூலகத் தமிழ்ப் பண்டிதர் மணி. மாறன், மனோகரன், விஸ்வநாதன், விஜி ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர்.

  இதுகுறித்து மணி. மாறன் தெரிவித்திருப்பது: இந்த ஊர் குறித்து ஒன்பத்துவேலி சந்திரசேகரன் அளித்த தகவலின் பேரில், கள ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, கி.பி. 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் கால சிவலிங்கம், அம்மன் சிலைகளைக் காண முடிந்தது. இந்தச் சிவலிங்க பானத்தின்மீது காணப்படும் பிரம்ம ரேகை பிற சிவலிங்கங்களிலிருந்து மாறுபட்டு காணப்படுவது சிறப்புக்குரியது. மேலும், நாயக்கர் காலத்தைச் சேர்ந்த ஆலமர்ச்செல்வன், விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் போன்ற சிற்பங்களும் காணப்படுகின்றன என்றார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai