படிதாண்டா பரமேஸ்வரி கோவில் அம்மன் புறப்பாடு

கும்பகோணம் ஸ்ரீ படிதாண்டா பரமேஸ்வரி அம்மன் கோவிலிலிருந்து ஸ்ரீ நீலகண்டேஸ்வரி, ஸ்ரீ பவள கண்டேஸ்வரி அம்மன்

கும்பகோணம் ஸ்ரீ படிதாண்டா பரமேஸ்வரி அம்மன் கோவிலிலிருந்து ஸ்ரீ நீலகண்டேஸ்வரி, ஸ்ரீ பவள கண்டேஸ்வரி அம்மன் புறப்பாடு செவ்வாய்கிழமை நடைபெற்றது.

கும்பகோணம் கும்பேஸ்வரர் தெற்கு வீதியில் காளியம்மன் கோவில் தெருவில் ஸ்ரீபடிதாண்டா பரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது.

இக்கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீபடிதாண்டா பரமேஸ்வரி நீலகண்டேஸ்வரி (பச்சை காளியம்மன்), ஸ்ரீ பவள கண்டேஸ்வரி (பவள காளியம்மன்) அம்மன்களுக்கு கடந்த 28-ம் தேதி காப்புக்கட்டி கரக திருநடன உத்சவ விழா தொடங்கியது. தொடர்ந்து வந்த விழா நாள்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்வான அம்பாள் புறப்பாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கோவிலிலிருந்து காலையில் அம்பாள் புறப்பட்டு மண்டகப்படி பக்தர்கள் பகுதிக்கு எழுந்தருள செய்யப்பட்டது.

தொடர்ந்து மாலை காவிரி நதிக்கு சென்று இரவில் அங்கிருந்து அநேக விருதுகளுடன் சக்தி கரகம், அக்னி கொப்பரை, பந்தம் முதலியவற்றுடன் ஈஸ்வரி திருநடனத்துடன் வீதியுலா வரும் நிகழ்வு நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, அம்மன்கள் கோவிலை வந்தடைந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com