சுடச்சுட

  

  இளங்காடு ஊராட்சியில் 699 பேருக்கு விலையில்லா பொருள்கள்

  By திருக்காட்டுப்பள்ளி  |   Published on : 17th February 2014 05:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ஒன்றியம், இளங்காடு (இராசகிரி) ஊராட்சியில் பயனாளிகள் 699 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா பொருள்களான மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

  விழாவுக்கு தஞ்சாவூர் மாவட்ட சிறப்பு செயலாக்கத்தின்  துணை ஆட்சியர் குணசேகரன் தலைமை வகித்தார். பூதலூர்  வட்டாட்சியர் வே. தெய்வநாயகி, ஒன்றியக்குழு உறுப்பினர் சத்யபாமா வெங்கடேசன், ஊராட்சித் தலைவர் சந்திரமதி சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  விழாவில் தஞ்சாவூர் சட்டப்பேரவை உறுப்பினர் எம். ரெங்கசாமி பங்கேற்று, பயனாளிகள் 699 பேருக்கு விலையில்லா பொருள்களை வழங்கிப் பேசியது:

  முதல்வர் ஜெயலலிதா பொறுப்பேற்ற 3 ஆண்டுகளில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி வருகிறார். திருவையாறு தொகுதிக்கு கல்லணையில் கரிகால் சோழன் மணிமண்படம், செங்கிப்பட்டியில் அரசு பொறியியல் கல்லூரி, திருவையாறில் வாழை பதனிடும் தொழிற்சாலை, பூதலூரை தலைமையிடமாகக் கொண்டு வட்டாட்சியர் அலுவலகம், திருக்காட்டுப்பள்ளி காவிரி ஆறு, குடமுருட்டி ஆற்றில் பாலம், பூதலூரில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் என பல்வேறு சிறப்பு திட்டங்களை முதல்வர் அறிவித்து, அதைச் செயலாக்கம் செய்துள்ளார் என்றார்.

  தொடர்ந்து திருவையாறு சட்டப்பேரவை உறுப்பினர் எம். ரெத்தினசாமி பேசினார்.

  விழாவில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் எஸ். ராஜா, ஒன்றியக்குழுத் துணைத் தலைவர் சி. நாகராஜன், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் எஸ்.எஸ்.பி. வெங்கடேசன், திருக்காட்டுப்பள்ளி நகர கூட்டுறவு சங்கத் தலைவர் எம்.பி.எஸ். ராஜேந்திரன், இளங்காடு அதிமுக நிர்வாகிகள் மோகன் (எ) தியாகராஜன், எஸ். வெங்கடேசன், நட. ஆறுமுகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai