Enable Javscript for better performance
தேர்வு மையங்களில் ஆட்சியர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூர் அரசர் மேல்நிலைப் பள்ளியில் எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வு நடைபெற்ற மையத்தை ஆட்சியர் என். சுப்பையன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

     இத்தேர்வை மாவட்டத்தில் மொத்தம் 38 ஆயிரத்து 349 பேர்   எழுதுகின்றனர். இதற்காக  150 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வில் முறைகேடு நடக்காதவண்ணம் 152 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் அரசர் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு நடைபெற்ற மையத்தை ஆட்சியர் என். சுப்பையன் பார்வையிட்டு கூறியது:

    தஞ்சாவூர் மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி வினாத்தாள் 8 மையங்களில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. தேர்வு அறைகளைக் கண்காணிக்க 2,151 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். பார்வை குறைந்தோர், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவியாக தேர்வு எழுத 99 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார் ஆட்சியர்.

    மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வே. தமிழரசு, மாவட்டக் கல்வி அலுவலர் ஜயராஜ், முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் இளஞ்செழியன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai