Enable Javscript for better performance
பாரத பிரதமரை கருணாநிதி தேர்ந்தெடுப்பார்: திருச்சி சிவா பேச்சு- Dinamani

சுடச்சுட

    

    பாரத பிரதமரை கருணாநிதி தேர்ந்தெடுப்பார்: திருச்சி சிவா பேச்சு

    Published on : 27th March 2014 01:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வரும் மக்களவைத் தேர்தல் முடிவில் பாரத பிரதமரை திமுக தலைவர் கருணாநிதி தேர்ந்தெடுப்பார் என்றார் திருச்சி சிவா.

    தஞ்சை நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர். பாலுவை ஆதரித்து திருச்சிற்றம்பலம் கடைவீதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:

    நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தல் வாக்காளர்கள் நீதிபதிகளாக இருந்து தீர்ப்பளிக்க வேண்டிய தேர்தல்.  வேட்பாளர் டி.ஆர். பாலு மத்திய அமைச்சராக, எம்பியாக இருந்து தமிழ்நாட்டிற்கு மட்டுமல்லாமல் இந்தியாவிற்கே எண்ணற்ற வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றியவர். நல்ல அனுபவம் வாய்ந்த இருந்த இடத்தில் இருந்து கொண்டே அனைத்தையும் சாதிக்கும் வல்லமை பெற்றவர்.

    தனித்தன்மை பெற்ற தலைவர்களில் ஒருவர். உயர்ந்த பண்புகளையும், உயரிய செயல்பாடுகளையும் பெற்ற ஒருவரை தஞ்சை தொகுதிக்காக கருணாநிதி அறிவித்துள்ளார். எனது தாய் இரண்டு விஷயங்களை அறிவுறுத்தி வளர்த்தார். யாரிடமும் தலைதாழ்ந்து போகாதே, யாரிடமும் கையேந்தி நிற்காதே என்று. அப்படிப்பட்ட சுயமரியாதையோடு வளர்ந்த நான் உங்கள் வேட்பாளரின் வெற்றிக்காக உங்களிடம் கையேந்தி வந்திருக்கிறேன். அவரின் வெற்றியை உறுதி செய்வீர்கள் என நம்புகிறேன் என்றார்.

    திருச்சிற்றம்பலம் நகரச் செயலர் சந்திரபோஸ் தலைமை வகித்தார்.

    மாவட்டத் துணைச் செயலர் என். செல்வராஜ், ஒன்றியச் செயலர்கள் பேராவூரணி சுப. சேகர், சேதுபாவாசத்திரம் மு.கி. முத்துமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சித் தலைவர் என். அசோக்குமார். முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர்கள் ஆ. பழனிவேல், இரா. ராஜரெத்தினம், தலைமைக்கழகப் பேச்சாளர் ஏ. அப்துல்மஜீது, திராவிடர் கழக ஒன்றியச் செயலர் வை. சிதம்பரம், ஒன்றியத் துணைச் செயலர் பார்வதிராஜாங்கம், ஒன்றியப் பிரதிநிதி பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai