Enable Javscript for better performance
ரயிலிலிருந்து தவறி விழுந்த ஆசிரியர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூரில் ரயிலிலிருந்து தவறி விழுந்து பலத்தக் காயமடைந்த ஆசிரியர் புதன்கிழமை உயிரிழந்தார்.

    திருவாரூர் மாவட்டம், விளமல் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (40), நாகை மாவட்டம், கீழ்வேளூரில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்.

    இவர் திருச்சியில் படிக்கும் தனது மகளை அழைப்பதற்காக மனைவி இந்துமதியுடன் நீடாமங்கலம் ரயில் நிலையத்திலிருந்து மன்னார்குடி - மானாமதுரை ரயிலில் செவ்வாய்க்கிழமை ஏறினார். சங்கர் நிலையத்துக்கு அவசரமாக வந்ததால் பயணச் சீட்டைப் பெறுவதற்குத் தவறினார்.

    எனவே, வழியில் அம்மாபேட்டை ரயில் நிலையத்தில் ரயில் நின்றவுடன் சங்கர் இறங்கிச் சென்று நிலைய அலுவலகத்தில் பயணச் சீட்டு பெற முயன்றார். பயணச் சீட்டு வாங்குவதற்குள் ரயில் புறப்பட்டதால் அவசரமாக ஓடிச் சென்று ரயிலில் ஏற முயன்றார். அப்போது, தவறி விழுந்த அவர் பலத்தக் காயங்களுடன் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

     தஞ்சை ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai