Enable Javscript for better performance
வாக்குப்பதிவை வலியுறுத்தி மனித சங்கிலி- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூர் மாவட்டத்தில் 100 சத வாக்குப்பதிவை வலியுறுத்தி நடைபெற்ற மனித சங்கிலியை மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் தொடங்கி வைத்தார்.

     தேர்தல் ஆணைய உத்தரவின்படி தஞசாவூர் மாவட்டத்தில்   புதன்கிழமை காலை தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு கலைக்கல்லூரி முன்னர் நடைபெற்ற மனித சங்கிலியை  ஆட்சியர் என். சுப்பையன் தொடங்கி வைத்து பங்கேற்றார்.

    வருவாய்க் கோட்டாட்சியர் தேவதாஸ் போஸ், வட்டாட்சியர் காமராஜ், தேர்தல் வட்டாட்சியர் முருகவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். குந்தவை நாச்சியர் அரசு மகளிர் கல்லூரியைச் சேர்ந்த 600-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர். கும்பகோணத்தில்...  மனித சங்கிலியை சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் எஸ். ரவி தொடங்கி வைத்து பங்கேற்றார்.

     வட்டாட்சியர் பிச்சைப்பிள்ளை தலைமை வகித்தார்.  நகராட்சி ஆணையர் கலைச்செல்வன், தேர்தல் துணை வட்டாட்சியர் சித்ரா, சமூக நலத்துறை பாலேந்திரன், வருவாய் அலுவலர்கள் சண்முகம், வெங்கடேஷ் மற்றும் இதயா மகளிர்கல்லூரி, சாஸ்த்ரா கல்லூரி, அரசினர் மகளிர் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai