Enable Javscript for better performance
விவசாயிகளின் நலன் காக்கப் பாடுபடுவேன்: மார்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளர் தமிழ்ச்செல்வி- Dinamani

சுடச்சுட

    

    விவசாயிகளின் நலன் காக்கப் பாடுபடுவேன்: மார்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளர் தமிழ்ச்செல்வி

    Published on : 27th March 2014 01:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விவசாயிகளின் நலனைக் காக்க பாடுபடுவேன் என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் தொகுதி வேட்பாளர் எஸ். தமிழ்ச்செல்வி.

    தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற கம்யூனிஸ்ட் கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:

     விவசாயிகளின் நலனைக் காக்க, விவசாயம் செழிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    பெண்களுக்கான வன்முறைகளை தடுத்து நிறுத்தவும், மீனவர்களின் பிரச்னையை தீர்த்து அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் கம்யூனிஸ்ட் கட்சிகள் போராடும். அதற்கு தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார் தமிழ்ச்செல்வி.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தஞ்சாவூர் நகரச் செயலர் பி. செந்தில்குமார் தலைமை வகித்தார்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் என். சீனிவாசன், மாவட்டச் செயலர் கோ. நீலமேகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் இரா. திருஞானம், மாநிலக் குழு உறுப்பினர் சி. சந்திரகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    திருக்காட்டுப்பள்ளியில்... திருவையாறு சட்டப்பேரவைத் தொகுதியின் இடதுசாரிக் கட்சிகளின் செயல்வீரர்கள் மற்றம் தேர்தல் பணிக்குழுக் கூட்டம் நடைபெற்றது.  கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிஎஸ். பாலசுப்பிரணமணியன் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலர் இரா. பரமசிவம், மாவட்டக் குழு உறுப்பினர் பிஎம். இளங்கோவன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் பங்கேற்ற வேட்பாளர் எஸ். தமிழ்செல்வி சிறப்புரையாற்றினார். மாவட்டச் செயலர் கோ. நீலமேகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai