திருவையாறில் பொம்மை பூ போடும் நிகழ்ச்சி

திருவையாறில் வியாழக்கிழமை இரவு ஏழூர் பல்லக்குகளும் வந்ததைத் தொடர்ந்து, பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவையாறில் வியாழக்கிழமை இரவு ஏழூர் பல்லக்குகளும் வந்ததைத் தொடர்ந்து, பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவையாறு ஐயாறப்பர் திருக்கோயிலில் சித்திரைப் பெருவிழா மே 3-ம் தேதி தொடங்கியது.

இதில், பிரதான நிகழ்ச்சியான சப்தஸ்தானம் என்கிற ஏழூர் பல்லக்கு வலம் வரும் விழா புதன்கிழமை காலை தொடங்கியது.

இதில், பெரிய பல்லக்கு, வெட்டிவேர் பல்லக்கு, திருப்பழனம் பல்லக்கு, திருச்சோற்றுத்துறை பல்லக்கு, திருவேதிக்குடி பல்லக்கு, திருக்கண்டியூர் பல்லக்கு, திருப்பூந்துருத்தி பல்லக்கு ஆகியவை திருநெய்த்தானம் என்கிற தில்லைஸ்தானம் காவிரியாற்றை புதன்கிழமை இரவு சென்றடைந்தது.

இதைத்தொடர்ந்து, அனைத்து பல்லக்குகளும் வியாழக்கிழமை இரவு திருவையாறு தேரடி திடலுக்குச் சென்றது. அங்கு பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு கண்டுகளித்தனர்.

இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு பல்லக்குகள் ஒவ்வொன்றாகச் சொந்த ஊருக்குப் புறப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com