சுடச்சுட

    

    கீழவாசல் வெள்ளைப்பிள்ளையார் கோயில் குடமுழுக்கு

    By தஞ்சாவூர்,  |   Published on : 16th September 2014 01:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தஞ்சாவூர் கீழவாசலில் உள்ள வெள்ளைப்பிள்ளையார் கோயில் குடமுழுக்குவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

    விழாவையொட்டி கடந்த 11-ம் தேதி கணபதி ஹோமம் தொடங்கியது. தொடர்ந்து நவக்கிரஹ ஹோமம், வாஸ்து சாந்தி முதலியவை நடைபெற்றது. 12-ம் தேதி காலை பிரசன்ன அபிஷேகம், 13-ம் தேதி மஹாலஷ்மி ஹோமம், தனபூஜை, முதல்கால யாக பூஜைகள் நடைபெற்றது. 14-ம் தேதி விசேஷ சந்தியா வந்தனம், இரண்டாம் கால பூஜைகள், மூன்றாம் கால பூஜைகள் ஆகியவை நடைபெற்றது. திங்கள்கிழமை அதிகாலை நான்காம் கால பூஜைகள், மஹா தீப ஆராதனை யாத்ரா தானம் நடைபெற்றது. பின் காலை 9.15 மணிக்கு திருக்கடம் புறப்பாடு நடைபெற்று, 9.45 மணிக்கு கோயில் விமான ராஜகோபுரத்தில் புனிதநீர் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது. பின்னர் மூலவர் ஸ்ரீ வெள்ளைப் பிள்ளையாருக்கு மஹா தீபாராதனை நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

    குடமுழுக்கையொட்டி திங்கள்கிழமை இரவு வல்லபை அம்பாள் சமேத வெள்ளைப்பிள்ளையார் திருவீதியுலா நடைபெற்றது.

    ஏற்பாடுகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் சி. பாபாஜி ராஜா பான்ஸ்லே, உதவி ஆணையர் சு. ஞானசேகரன், செயல் அலுவலர் தா. அரவிந்தன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai