Enable Javscript for better performance
ஆட்சியரகத்தில் உண்ணாவிரதம்: 13 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் காவல் துறையினரைக் கண்டித்து வியாழக்கிழமை உண்ணாவிரதம் மேற்கொள்வதற்காக அமர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் உள்பட 13 பேரை போலீஸார் கைது செய்தனர்.

    தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை முனியாண்டவர் காலனியில் சில நாட்களுக்கு முன்பு நிகழ்ந்த தகராறு தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தஞ்சாவூர் மேற்கு மாவட்டச் செயலர் வீரன் வெற்றிவேந்தனின் மகன்கள் ஏங்கல்ஸ், லெனின் ஆகிய இருவரையும் தெற்கு போலீசார் கைது செய்தனர்.

    மேலும் கொலை முயற்சி செய்ததாக இருவர் மீது வழக்குப் பதிந்தனர்.

    இதைக் கண்டித்து மாவட்ட ஆட்சியரகத்தில் வீரன் வெற்றிவேந்தன் தலைமையில் குடும்பத்தினர் உள்ளிட்டோர் உண்ணாவிரதம் மேற்கொள்வதற்காக வியாழக்கிழமை காலை அமர்ந்தனர்.

    அப்போது, வீரன் வெற்றிவேந்தன் தெரிவித்தது:

    என் மகன்கள் மீது பொய்யான வழக்குப் பதிவு செய்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளரைக் கண்டித்து உண்ணாவிரதம் மேற்கொள்கிறோம்.

    இதுதொடர்பாக மறு விசாரணை நடத்தப்பட வேண்டும். இதற்குக் காரணமான காவல் கண்காணிப்பாளர், தெற்குக் காவல் நிலைய ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.

    தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று வீரன் வெற்றிவேந்தன் உள்பட 13 பேரை கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai