Enable Javscript for better performance
கிராமப்புற தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    அனைவருக்கு வீட்டு மனை, வீடு அடிப்படை உரிமையாக்க கோருவது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    அனைவருக்கும் வீட்டுமனை, வீடு அடிப்படை உரிமையாக்க வேண்டும், வெளிநாட்டு, உள்நாட்டு கம்பெனிகளுக்காக நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும், நிலமற்ற அனைவருக்கும் வீட்டுமனை வழங்க வேண்டும், வேலை உறுதித் திட்டம் உள்ளிட்ட அனைத்து வேலைகளுக்கும் குறைந்தபட்சக் கூலியாக ரூ. 500 வழங்கிட வேண்டும், ஆதார் அட்டையை காட்டி

    அங்காடியை மூடக்கூடாது, டாஸ்மாக் கடைகளை இழுத்து மூட வேண்டும், ஆந்திரத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட 20 பழங்குடி தொழிலாளர் உள்ளிட்ட அனைவருக்கும், சிறையில் உள்ள 5 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும், செம்மரக் கடத்தலில் ஈடுபடும் கடத்தல் மாபியாக்களை, அரசியல்வாதிகளை, உயர் அதிகாரிகளைக் கைது செய்ய வேண்டும், பொய் மோதலில் ஈடுபட்டுள்ள ஆந்திர வனத்துறை, அதிரடிப்படையினர், உயர் அதிகாரிகள் மீது கொலை குற்ற தண்டனை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டச் செயலர் கே. மாசிலாமணி தலைமை வகித்தார்.

    ஏஐசிசிடியு மாவட்ட குழு மனோகரன், சிங்காரவேல், ஏஐஎஸ்ஏ மாநில துணைத் தலைவர் பீமாராவ்ராம்ஜி, மாநிலத் தலைவர் டி.கே.எஸ். ஜனார்த்தனன், மாவட்டத் தலைவர் டி. கன்னையன்,ராஜேந்திரன், வீரவிஜயகுமார், பிரியா, நதியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai