Enable Javscript for better performance
கோயில் காவலாளி கொலை வழக்கில் இளைஞர் கைது- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூர் அருகே திருக்காட்டுப்பள்ளி கோயிலில் காவலாளியைக் கொலை செய்து, உண்டியல் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் இளைஞரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

    திருக்காட்டுப்பள்ளி அக்னீசுவரசுவாமி கோயிலில் தெற்கு வாடித் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் (55) காவலாளியாகப் பணியாற்றி வந்தார். கோயிலில் ஏப். 10-ம் தேதி இரவு இவர் கொல்லப்பட்டு செளந்தரநாயகி அம்மன் சன்னதி முன் உள்ள உண்டியல் பூட்டை உடைத்து ரொக்கமும் கொள்ளையடிக்கப்பட்டது.

    இதுகுறித்து திருக்காட்டுப்பள்ளி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

    மேலும், செல்வராஜ் வீட்டு அருகே வசித்து வரும் பாலுவை (23) சந்தேகத்தின் பேரில் போலீஸார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில், பாலு சம்பவத்தன்று இரவு கோயில் மதில் சுவரில் ஏறி குதித்து அம்மன் சன்னதி முன் இருந்த உண்டியல் பூட்டை உடைத்தாராம். அப்போது தூங்கிக் கொண்டிருந்த செல்வராஜ் விழித்து சப்தமிட முயன்றதால், அவரது கழுத்தை துண்டால் நெரித்து கொலை செய்தாராம். இதையடுத்து, சுவாமி, அம்மன் சன்னதி கதவில் இருந்த பூட்டை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற பாலுவுக்கு அச்சம் ஏற்பட்டதாம். எனவே, திருடும் முயற்சியைக் கைவிட்டு தப்பிச் சென்றது என்பது தெரிய வந்தது. இதையடுத்து பாலுவை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai