Enable Javscript for better performance
சத்துணவு ஊழியர்கள் உண்ணாவிரதம்- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொண்டு வரும் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர்.

    ஊதியக் குழுவால் வரவேற்கப்பட்ட ஊதிய உயர்வு, காலிப் பணியிடங்களை நிரப்புதல், குறைந்தபட்சம் ரூ. 3,000 ஓய்வூதியம் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் மாநில அளவில் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை புதன்கிழமை தொடங்கினர்.

    இதேபோல, தஞ்சாவூர் மாவட்டத்திலும் இந்தச் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் வேலைநிறுத்தம் மேற்கொண்டு வருகின்றனர். இóந்நிலையில், தஞ்சாவூர் பனகல் கட்டடம் முன் இந்தச் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் வியாழக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர். சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர். மனோகரன் தலைமை வகித்தார்.

    ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாநிலச் செயலர் புஷ்பநாதன், அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கோவிந்தராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai