Enable Javscript for better performance
தஞ்சையில் நாளை மீன்வளர்ப்பு கருத்தரங்கம்- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூர் மாவட்ட உள்நாட்டு மீனவர்கள் மற்றும் மீன்வளர்ப்போருக்கான ஒருங்கிணைந்த மீன்வளர்ப்புக் கருத்தரங்கம் வரும் 18-ஆம் தேதி நடைபெறுகிறது.

    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிக்கை: தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள உள்நாட்டு மீனவர்கள் மற்றும் மீன் வளர்ப்போரை ஒருங்கிணைத்து மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் தலைமையில் நடைபெறும் கருத்தரங்கம், கீழவாசல் அண்ணா திருமண மண்டபத்தில் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதில் தமிழக வீóட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறை மற்றும் வேளாண்துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம், மக்களவை உறுப்பினர் கு. பரசுராமன், எம்எல்ஏக்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். ஆகையால் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள உள்நாட்டு மீனவர்கள் மற்றும் மீன்வளர்ப்போர் இதில் பங்கேற்று பயன்பெறலாம்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai