Enable Javscript for better performance
திருவிடைமருதூரில் ஏப்.19-ல் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    திருவிடைமருதூரில் ஏப்.19-ல் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

    By கும்பகோணம்  |   Published on : 17th April 2015 05:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாணவ, மாணவியர்களின் எதிர்கால முன்னேற்றத்துக்காக வழிகாட்டி நிகழ்ச்சி வரும் 19-ம் தேதி திருவிடைமருதூர் சட்டப்பேரவை உறுப்பினர் கோவி. செழியன் ஏற்பாட்டில் நடைபெற உள்ளது.

    இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

    பொதுத் தேர்வு முடிவு வெளிவந்தவுடன் மாணவ,மாணவிகளும் பட்டபடிப்பு முடித்தவர்களும் வேலைவாய்பிற்குரிய மேற்படிப்பிற்கான பாடப்பிரிவு என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம் எந்தக் கல்லூரியில் படிப்பை தொடங்கலாம் என்ற வழிகாட்டி நிகழ்ச்சி திருவிடைமருதூர் சாரதா மகாலில் நடைபெற உள்ளது.

    காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை நடைபெற உள்ள முகாமில் தமிழகத்தின் தலைச்சிறந்த கல்வியாளர் மற்றும் செய்தியாளர் அபுல்பைஸ், சென்னை அண்ணா பல்கலைக்கழக முன்னாள் இயக்குநர் பி.வி. நவநீதகிருஷ்ணன், சென்னை கோபாலபுரம் டி.ஏ.வி. மேல்நிலைப்பள்ளி முன்னாள் முதல்வர் சதீஷ்,சென்னை பல்கலை. பேராசிரியர் ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டு ஆலோசனை வழங்க உள்ளனர். மேலும் விவரங்களுக்கு 94441-62050,92456-72700,9698-281080

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai