Enable Javscript for better performance
தூய்மை இந்தியா இயக்க முதன்மைப் பயிற்றுநர்களுக்கு பயிற்சி - Dinamani

சுடச்சுட

    

    தூய்மை இந்தியா இயக்க முதன்மைப் பயிற்றுநர்களுக்கு பயிற்சி

    By தஞ்சாவூர்  |   Published on : 17th April 2015 05:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் தனிநபர் இல்லக்கழிப்பறை செயலாக்கம் குறித்த முதன்மை பயிற்றுனர்களுக்கு தஞ்சாவூரில் பயற்சி அளிக்கப்பட்டது.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் தனிநபர் இல்லக்ககழிப்பறை செயலாக்கம் குறித்த முதன்மை பயிற்றுனர்களுக்கு, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அரங்கில் புதன்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி முகாமை தஞ்சாவூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சீனிவாசன் தொடங்கி வைத்தார். பயிற்சியில் மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் ம. சிவக்குமார் தனிநபர் இல்லக்கழிப்பறை செயலாக்கும் குறித்து விளக்கினார். மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பணி மேற்பார்வையாளர்கள், ஊராட்சித் தலைவர்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்க பிரதிநிதிகள், சமூக பயிற்றுனர் ஆகியோர்களுக்கு, சிறப்பு பயிற்றுனர்களும் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. பயிற்சி முகாமில் பயிற்சி பெற்ற முதன்மை பயிற்றுனர்கள் மூலம் வரும் 18-ஆம் தேதி முதல் அனைத்து ஊராட்சிகள், வட்டாரங்களில் தனிநபர் இல்லக்கழிப்பறை செயலாக்க பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai