Enable Javscript for better performance
பேராவூரணி அருகே ரத்த தான முகாம்- Dinamani

சுடச்சுட

    

    பேராவூரணி அருகே உள்ள ஏனாதிகரம்பை சமுதாய விழுதுகள் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் ரத்ததான முகாம் புதன்கிழமை நடைபெற்றது. மன்றத் தலைவர் சத்திய. ஜெகதீசன் தலைமை வகித்தார். ஒன்றியக் குழுத் தலைவர் சாந்தி அசோக்குமார் தொடங்கி வைத்தார்.

    பேராவூரணி பேரூராட்சித் தலைவர் என். அசோக்குமார், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் வி. செளந்தரராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் 30 பேர் ரத்ததானம் செய்தனர்.

    செருவாவிடுதி ஆரம்ப சுகாதார நிலையம் மூலமாக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை ரத்த வங்கிக்கு ரத்தம் அனுப்பப்பட்டது. ஊராட்சி தலைவர் மு.சிதம்பரம், ஒன்றியக் குழு உறுப்பினர் செ. கருணாநிதி, முன்னாள் மாவட்டக் குழு உறுப்பினர் வை. முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மன்ற செயலர் பா. திலீப்குமார் வரவேற்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai