Enable Javscript for better performance
வீடு புகுந்து அரிவாளைக் காட்டி மிரட்டி நகை பறிப்பு- Dinamani

சுடச்சுட

    

    வீடு புகுந்து அரிவாளைக் காட்டி மிரட்டி நகை பறிப்பு

    By தஞ்சாவூர்  |   Published on : 17th April 2015 05:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

     தஞ்சாவூர் அருகே வியாழக்கிழமை அதிகாலை வீடு புகுந்து அரிவாளைக் காட்டி மிரட்டி நகைகளைப் பறித்து சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

    தஞ்சாவூர் அருகே காட்டுத்தோட்டம் சரஸ்வதி நகரைச் சேர்ந்தவர் காந்தி (72). இவர் சென்னையிலுள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றதால் வீட்டில் தனது சகோதரர் உலகய்யனை (55) காவலுக்கு இருக்குமாறு கூறிச் சென்றார்.

    வீட்டில் உலகய்யன், அவரது மனைவி மகேஸ்வரி (45), மகன்கள் வினீத், வினோத் ஆகியோர் வியாழக்கிழமை அதிகாலை தூங்கிக் கொண்டிருந்தனர்.

    அப்போது முகத்தைக் கைக்குட்டையால் மூடியபடியும், கால் சட்டை அணிந்தபடியும் வந்த மர்ம நபர்கள் பின்பக்கக் கதவைக் கடப்பாரையால் நெம்பி திறந்தனர்.

    உள்ளே புகுந்த மர்ம நபர்கள் தூங்கிக் கொண்டிருந்த மகேஸ்வரியின் கழுத்திலிருந்த ஐந்தரை பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்தனர்.

    மகேஸ்வரின் மகன்கள் சப்தம் எழுப்பியதால் மர்ம நபர்கள் தப்பிவிட்டனர்.

    இதுகுறித்து தாலுகா போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai