Enable Javscript for better performance
700 குடும்பங்களுக்கு விலையில்லாப் பொருள்- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு சட்டபேரவை தொகுதிக்குட்பட்ட பெரம்பூர் 1-ம் சேத்தி கிராமத்தைச் 700 குடும்பங்களுக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் தலைமை வகித்தார். தமிழக வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித்துறை மற்றும் வேளாண்துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம் பேசியது:

    தமிழகத்தில் உள்ள 1.95 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லாப் பொருள் வழங்க தமிழக முதல்வரால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 80 சதம் வரை வழங்கப்பட்டுள்ளன.

    தஞ்சாவூர் மாவட்டத்தில் 6.40 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். அனைவருக்கும் விலையில்லா பொருட்கள் வழங்கப்படும்.

    ஒரே நேரத்தில் அனைத்து குடும்பங்களுக்கும் விலையில்லா பொருட்களை உற்பத்தி செய்து வழங்குவது சிரமமான காரியம் என்பதால்தான், 5 கட்டங்களாக வழங்கப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை 3,35,287 குடும்பங்களுக்கு விலையில்லா பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.

    ஏழைகளின் சிரமங்களை போக்க தமிழக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

    ஆனாலும் ஏழைகளின் வறுமை போக்கவல்ல ஒரே ஆயுதம் கல்வி ஒன்றுதான் என்றார் அமைச்சர்.

    தஞ்சாவூர் மக்களவை உறுப்பினர் கு. பரசுராமன், எம்எல்ஏக்கள் எம். ரெங்கசாமி, எம். ரெத்தினசாமி, மாவட்ட ஊராட்சித் தலைவர் அமுதா ரவிச்சந்திரன், ஒன்றியக் குழுத் தலைவர் லெட்சுமணன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தம்பிதுரை, ஒன்றியக்குழு உறுப்பினர் மோகன்தாஸ், திருவையாறு வட்டாட்சியர் துரைராஜ், பெரம்பூர் 1-ம் சேத்தி ஊராட்சித் தலைவர் சாந்தகுமாரி முருகேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai