Enable Javscript for better performance
குடந்தையில் 2 கோயில்களில் மகா கும்பாபிஷேகம்- Dinamani

சுடச்சுட

    

    குடந்தையில் 2 கோயில்களில் மகா கும்பாபிஷேகம்

    By கும்பகோணம்  |   Published on : 22nd August 2015 03:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கும்பகோணம் பகுதியில் உள்ள 2 கோயில்களில் வெள்ளிக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    கும்பகோணம் ரயில் நிலையத்தில் ஸ்ரீகற்பக விநாயகர் கோயில் உள்ளது. பழைமையான இக்கோயிலில் 23-10-1969 அன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. சுமார் 46 ஆண்டுகளுக்கு பிறகு இக்கோயிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கடந்த 18-ம் தேதி விநாயகர் பிரார்த்தனையுடன் குடமுழுக்கு விழா தொடங்கியது.

    19-ம் தேதி முதல்கால யாகபூஜையும், 20-ம் தேதி காலை, மாலையில் இரண்டு மற்றும் மூன்றாம் கால யாகபூஜைகளும் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை காலை நான்காம் கால யாகபூஜை நடைபெற்றது. இதையடுத்து புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பட்டு கோயிலை வலம் வந்து விமான கும்பாபிஷேகமும், மூலவருக்கு மகா கும்பாபிஷேகமும் நடைபெற்றது. மாலையில் மகாஅபிஷேகம் நடைபெற்றது.

    சீராட்டும் விநாயகர் கோயில் மகாகும்பாபிஷேகம்: இதேபோல், கும்பகோணம் பேட்டை பஞ்சுக்காரத் தெருவில் உள்ள சீராட்டும் விநாயகர் கோயிலில் திருப்பணி செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.

    வியாழக்கிழமை விக்னேஸ்வர பூஜையுடன் குடமுழுக்கு விழா தொடங்கி, முதல் கால யாகபூஜை நடைபெற்றது. வெள்ளிக்கிழமை இரண்டாம் காலயாக பூஜை நடைபெற்றது. இதையடுத்து யாகசாலை பந்தலிலிருந்து கடங்கள் புறப்பட்டு கோயிலை வலம் வந்து மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. மாலையில் மகா அபிஷேகம் நடைபெற்றது.

    எலந்தரப்பார் ஐயனார் சுவாமி, வீரனார் சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம்:

    இதேபோல், கும்பகோணம் அருகேயுள்ள கோவிலாச்சேரி கிராமத்தில் உள்ள எலந்தரப்பார் ஐயனார் சுவாமி, வீரனார் சுவாமி கோயில் திருப்பணி செய்யப்பட்டு,

    மகா கும்பாபிஷேகம் ஆகஸ்ட் 20-ம் தேதி காலை நடைபெற்றது. இதையொட்டி கடந்த 19-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை இரண்டு காலம் யாகபூஜைகள் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை (ஆக.21) முதல் மண்டலாபிஷேக பூஜைகள் தொடங்கி நடைபெறுகின்றன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai