Enable Javscript for better performance
கும்பகோணத்தில் 5 கோயில்களில் குடமுழுக்கு- Dinamani

சுடச்சுட

    

    கும்பகோணத்தில் 5 கோயில்களின் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    கும்பகோணம் சோலையப்பன் தெரு கற்பக விநாயகர் கோயில் ரூ. 1.20 லட்சத்திலும், அதே தெருவில் உள்ள விசாலாட்சி அம்பாள் சமேதர் விஸ்வநாதசுவாமி கோயில் ரூ. 3.30 லட்சத்திலும், கும்பேஸ்வரார் கோயில் மேலவீதி தாய்மூகாம்பிகையம்மன் கோயில் ரூ. 1.90 லட்சத்திலும், வளையப்பேட்டை குடிகாத்த மாரியம்மன் கோயில் ரூ. 5.10 லட்சத்திலும் திருப்பணிகள் செய்யப்பட்டு ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு மேல் குடமுழுக்கு நடைபெற்றது.

    அறநிலையத் துறைக்கு சொந்தமான இந்த 4 கோயில்களில் ரூ. 11.55 லட்சத்தில் திருப்பணி செய்யப்பட்டிருந்தது. கோயில் நிர்வாகத்தினர், திரளான பொதுமக்கள் குடமுழுக்கு விழாவில் பங்கேற்றனர்.

    மேலும், கீழக்கொட்டையூர் பக்திவிநாயகர் கோயில் சுமார் ரூ. 1 லட்சத்தில் திருப்பணி செய்யப்பட்டு, அதன் குடமுழுக்கும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கும்பாபிஷேக நிகழ்ச்சிகளில் பக்தர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai