Enable Javscript for better performance
கொற்கை ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    குடியரசு தினத்தையொட்டி கும்பகோணம் அருகேயுள்ள கொற்கை ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

    கூட்டத்துக்கு ஊராட்சித் தலைவர் தியாகராஜன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தஞ்சாவூர் சட்டப்பேரவை உறுப்பினர் ரெங்கசாமி பங்கேற்றார்.

    இதில் ஊராட்சி பொது நிதி, ஊராட்சியில் தனிநபர் கழிப்பறை, இந்திராகாந்தி நினைவு குடியிருப்பு பயணிகள் தேர்வு செய்தல், சுகாதார வசதிகள், ஊராட்சிக்கு சொந்தமான கட்டடங்கள் பராமரிப்பு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், கிராம முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai