Enable Javscript for better performance
பேருந்து வாய்க்காலில் கவிழ்ந்ததில் 16 பேர் காயம்- Dinamani

சுடச்சுட

    

    பேருந்து வாய்க்காலில் கவிழ்ந்ததில் 16 பேர் காயம்

    By தஞ்சாவூர்  |   Published on : 27th January 2015 02:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கும்பகோணம் அருகே திங்கள்கிழமை இரவு சாலையோர வாய்க்காலில் அரசுப் பேருந்து கவிழ்ந்ததில்  16 பேர் காயமடைந்தனர்.

    கும்பகோணத்திலிருந்து சுமார் 40 பயணிகளுடன் மயிலாடுதுறைக்கு அரசுப் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. கும்பகோணம் சாக்கோட்டை அருகே ஸ்ரீ ரெங்கராஜபுரம் என்ற இடத்தில் வந்தபோது சாலையோரம் இருந்த கோரை வாய்க்காலில் சுமார் 20 அடி பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்தது. இதில் பேருந்து ஓட்டுநர் அன்பழகன் உள்பட 16 பேர் லேசான காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் ஓட்டுநர் அன்பழகன் (57), ஜெயினுலாபுதீன் (37), மகாதேவன் (35), வசந்தா (62) ஆகிய 4 பேர் மட்டும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து நாச்சியார்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai