Enable Javscript for better performance
வீடு புகுந்து பெண்களிடம் 11 பவுன் நகை பறிப்பு- Dinamani

சுடச்சுட

    

    வீடு புகுந்து பெண்களிடம் 11 பவுன் நகை பறிப்பு

    By தஞ்சாவூர்,  |   Published on : 27th January 2015 02:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை ரெட்டிப்பாளையம் அருகேயுள்ள வித்யா நகரில் வசிப்பவர் மரகதவள்ளி. இவரது கணவர் சுந்தரமூர்த்தி கடந்த சில மாதங்களுக்கு முன் இறந்து விட்டார்.

    இந்த தம்பதிக்கு வெற்றிக்கொடி, ராணி என்ற இரு மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகிவிட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தாய் மரகதவள்ளியைக் காண மகள்கள் வெற்றிக்கொடி, ராணி இருவரும் தஞ்சாவூருக்கு வந்து தனது தாயுடன் தங்கியிருந்தனர். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வெற்றிக்கொடி, ராணி ஆகிய இருவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

    அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் வெற்றிக்கொடி மற்றும் ராணி ஆகியோர் கழுத்தில் அணிந்திருந்த 11 பவுன் நகைகளை பறித்துக் கொண்டு தப்பிச்சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai