Enable Javscript for better performance
அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் ஓட்டுநர் கைது- Dinamani

சுடச்சுட

    

    அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் ஓட்டுநர் கைது

    By தஞ்சாவூர்  |   Published on : 28th January 2015 03:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தஞ்சாவூர், ஜன. 27: திருவையாறு அருகே கொள்ளிடம் ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

    திருவையாறு-திருக்காட்டுப்பள்ளி சாலையில் உள்ள கொள்ளிடம் ஆற்றின் தென்கரையில் வடுகக்குடியில் அனுமதியின்றி மணல் அள்ளப்படுவதாக புகார்கள் வந்தன.

    இதையடுத்து, அந்தப் பகுதியில் மருவூர் போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    திங்கள்கிழமை அதிகாலை வடுகக்குடி கொள்ளிடம் ஆற்றில் டிப்பர் பொருத்திய டிராக்டரில் மணல் எடுத்து வந்த நபரை மருவூர் காவல் ஆய்வாளர் நடராஜன் மற்றும் போலீஸார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் அவர் அச்சலூரைச் சேர்ந்த எம். சரண்ராஜ் (28) என்பதும், சிவஞானம் என்பவருக்கு சொந்தமான டிராக்டரில் அனுமதியின்றி மணல் அள்ளி வந்ததும் தெரிய வந்தது.

    இதையடுத்து, சிவஞானம், சரண்ராஜ் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து

    ஓட்டுநர் சரண்ராஜை கைது செய்தனர். மேலும், மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிராக்டரையும் மணலுடன் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai