Enable Javscript for better performance
சுவர் இடிந்து விழுந்ததில் தொழிலாளி சாவு- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூர், ஜன. 27: கும்பகோணம் அருகேயுள்ள  நாச்சியார்கோவில் பள்ளிவாசல் கீழமுஸ்லிம் தெருவைச் சேர்ந்தவர் முகமது ஆசிக். இவர் தற்போது வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். நாச்சியார்கோவில் உள்ள இவரது பழைய வீட்டை இடித்துவிட்டு, புதிய வீடு கட்ட எண்ணினார்.

    அதற்காக பழைய வீட்டை இடிக்கும் பொறுப்பை நாச்சியார்கோவிலைச் சேர்ந்த மணிகண்டன் என்ற ஒப்பந்தக்காரரிடம் ஒப்படைத்துள்ளார். அவர் அகரமான்குடியைச் சேர்ந்த குமார் (30), வேலன்குடியைச் சேர்ந்த என்.பிரபாகரன் (26) ஆகிய இரு தொழிலாளர்களையும் பழைய வீட்டை இடிக்க திங்கள்கிழமை காலை அனுப்பி வைத்தார்.

    திங்கள்கிழமை காலை குமாரும், பிரபாகரனும் பழைய வீட்டை இடித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக வீட்டின் சுவர் ஒன்று இடிந்து இருவர் மீதும் விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே குமார் உயிரிழந்தார். பிரபாகரன் பலத்த காயமடைந்தார். அருகிலிருந்தவர்கள் பிரபாகரனை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நாச்சியார்கோவில் போலீஸார், ஒப்பந்தக்காரர் மணிகண்டன் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai