Enable Javscript for better performance
தஞ்சாவூர் மாவட்டத்தில் 11 வட்டாட்சியர்கள் இடமாற்றம்- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூர் மாவட்டத்தில் 11 வட்டாட்சியர்கள் இடமாற்றம்

    By தஞ்சாவூர்  |   Published on : 28th January 2015 03:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தஞ்சாவூர், ஜன, 27: தஞ்சாவூர் மாவட்டத்தில் 11 வட்டாட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளர் ஜி. ரகுராமன் ஒரத்தநாடு வட்டாட்சியராகவும், ஒரத்தநாடு வட்டாட்சியர் ஆர். பானுகோபன் பட்டுக்கோட்டை நகர்ப்புற நில அளவைத் திட்டத் தனி வட்டாட்சியராகவும், இந்த இடத்தில் தனி வட்டாட்சியராக இருந்த பொ. சேதுராமன் பட்டுக்கோட்டை வட்டாட்சியராகவும், பட்டுக்கோட்டை வட்டாட்சியர் தி. பாஸ்கரன் திருவையாறு சமூகப் பாதுகாப்புத் திட்டத் தனி வட்டாட்சியராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.  திருவையாறு சமூகப் பாதுகாப்புத் திட்டத் தனி வட்டாட்சியர் பா. சுரேஷ் தஞ்சாவூர் வட்டாட்சியராகவும், தஞ்சாவூர் வட்டாட்சியர் வி. துரைராஜ் திருவையாறு வட்டாட்சியராகவும், திருவையாறு வட்டாட்சியர் வை. மனோகரன் தஞ்சாவூர் சத்திரம் நிர்வாகத் தனி வட்டாட்சியராகவும்,  கலால் பிரிவு அலுவலக மேலாளர் ஆர். புஷ்பவள்ளி தனி வட்டாட்சியராகவும் (முத்திரைக் கட்டணம்), தனி வட்டாட்சியர் (முத்திரைக் கட்டணம்) கே. கார்த்திகேயன் மாவட்ட வழங்கல் அலுவலரின் நேர்முக உதவியாளராகவும்,  கும்பகோணம் கோட்ட கலால் அலுவலர் ஆர். உஷா திருவிடைமருதூர் சமூகப் பாதுகாப்புத் திட்டத் தனி வட்டாட்சியராகவும், இந்த இடத்தில் தனி வட்டாட்சியர் எஸ். கார்த்திகேயன் கும்பகோணம் வட்ட வழங்கல் அலுவலராகவும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    இதற்கான ஆணையை மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் பிறப்பித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai