Enable Javscript for better performance
\\\"நெல் கொள்முதல் நிலையங்களில் தேவையான முறையில் பணம் பெறலாம்\\\'- Dinamani

சுடச்சுட

    

    "நெல் கொள்முதல் நிலையங்களில் தேவையான முறையில் பணம் பெறலாம்'

    By தஞ்சாவூர்  |   Published on : 28th January 2015 03:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தஞ்சாவூர், ஜன. 27: அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் நெல்லுக்கு பணம் பட்டுவாடா செய்வதில் எந்த முறை விவசாயிகளுக்கு எளிதாக இருக்கிறதோ, அந்த முறையில் பணம் பெற்றுக் கொள்ளலாம் என்றார் உணவுப்பொருள் வழங்கல் துறை ஆணையர் எஸ். கோபாலகிருஷ்ணன்.

    தஞ்சாவூர் நீலகிரி தெற்கு தோட்டம் வட்டார அரிசி கிடங்கை செவ்வாய்க்கிழமை பார்வையிட்ட ஆணையர், பொது விநியோகத் திட்டத்துக்கு அரிசி அனுப்பும் பணியைக் கால தாமதப்படுத்தக் கூடாது என நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலர்களுக்கு ஆணையிட்டார்.

    பின்னர், வாண்டையார் இருப்பு கிராமத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் மற்றும் தானிய கிடங்கை ஆய்வு செய்த ஆணையர், வங்கிகள் மூலம் பணம் பட்டுவாடா செய்யும் முறை சுலபமாக இருக்கிறதா என விவசாயிகளிடம் கேட்டார். வங்கிகள் மூலம் பணம் பெற்றுக் கொண்டாலும், அறுவடை செய்த நெல்லை போட்டவுடன் பணமாக கொடுத்தால்தான் மிகவும் வசதியாக இருக்கும் என விவசாயிகள் தெரிவித்தனர். இதற்குப் பதிலளித்த ஆணையர், விவசாயிகளுக்கு எந்த முறை சுலபமாக இருக்கிறதோ, அந்த முறையில் பணம் பெற்றுக் கொள்ளலாம் என்றார்.சாக்குகள் இருப்பு, பணம் கையிருப்பு போன்றவை போதிய அளவு இருப்பதையும் ஆணையர் ஆய்வு செய்தார். பின்னர், அவர் தெரிவித்தது:

    தஞ்சாவூர் மாவட்டத்தில் 339 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் ஜன. 26-ம் தேதி வரை 26,843 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கொள்முதல் செய்யப்பட்டுள்ள நெல்லுக்கு இதுவரை ரூ. 39.45 கோடி பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது என்றார் கோபாலகிருஷ்ணன். அப்போது, ஆட்சியர் என். சுப்பையன், நுகர்பொருள் வாணிபக் கழகத் துணை மேலாளர் (தரக் கட்டுப்பாடு) கலியமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai