Enable Javscript for better performance
\\\"பாஜகவின் மொழித் திணிப்பை முறியடிக்க வேண்டும்\\\'- Dinamani

சுடச்சுட

    

    "பாஜகவின் மொழித் திணிப்பை முறியடிக்க வேண்டும்'

    By தஞ்சாவூர்  |   Published on : 28th January 2015 02:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தஞ்சாவூர், ஜன. 27: பாஜக அரசின் மொழித்திணிப்பை முறியடிக்க வேண்டும் என்றார் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில இணைச்செயலர் காளியப்பன்.

    தஞ்சாவூர் ரயிலடியில் மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பில், தமிழ்நாடு மாணவர்களின் இந்தி திணிப்புப் போராட்டத்தின் பொன்விழா ஆண்டு உறுதியேற்பு கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.

    கூட்டத்துக்கு மகஇக தஞ்சாவூர் நகரச் செயலர் ராவணன் தலைமை வகித்தார். இதில் மகஇக மாநில இணைச்செயலர் காளியப்பன் பேசியது:

    தமிழக மக்களும், மாணவர்களும் தமிழ்மொழிக்காக நடத்திய போராட்டமே, இந்தியாவில் பிறமாநில மொழிகளின் பாதுகாப்புக்கு அரண் அமைத்துக் கொடுத்தது. தற்போது ஆட்சிக்கு வந்திருக்கும் பாஜக அரசு தமிழகத்தை 4-ஆம் கட்ட இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு தள்ளிக் கொண்டிருக்கிறது. இந்தியையும், சம்ஸ்கிருதத்தையும் திணிக்கும் முயற்சியில் மோடி அரசு வேகமாக ஈடுபடுகிறது. இது மொழியை கற்பிக்கும் நடவடிக்கையில்லை. அதை ஒரு கருவியாகக் கொண்டு இந்துத்துவாக் கருத்துகளைத் திணிப்பதே நோக்கம். எனவே, பாஜக அரசின் மொழித்திணிப்பு முயற்சியை முறியடிப்பது இன்றைய அவசிய தேவையாகும் என்றார்.   கூட்டத்தில் பேராசிரியர் அரங்க. சுப்பையா, தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் விடுதலை முன்னணி அமைப்பாளர் மாரிமுத்து, திருவாரூர் மாவட்டம் புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி அமைப்பாளர் ஆசாத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai