Enable Javscript for better performance
பாஜக அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தஞ்சாவூர், ஜன. 27: நூறுநாள் வேலை திட்டத்தை முடக்க முயற்சிக்கும் மத்திய அரசைக் கண்டித்து, தஞ்சாவூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி-எஸ்.டி. பிரிவு சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    தஞ்சாவூர் ரயிலடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தஞ்சாவூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி-எஸ்.டி. பிரிவு மாவட்டத் தலைவர் பொன். நல்லதம்பி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியால் கொண்டு வரப்பட்ட நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை முடக்க முயற்சிக்கும் பாஜக அரசின் செயல்பாடுகளையும், பிரதமர் மோடியின் நடவடிக்கைகளுக்கும் கண்டனம் தெரிவித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    ஆர்ப்பாட்டத்தில் தஞ்சாவூர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் நாஞ்சி கி. வரதராஜன், குணா பரமேஸ்வரி, இளஞ்சிங்கம், அக்கரை செல்வம், அசோக்ராஜ் உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai