Enable Javscript for better performance
பாலியல் தொழிலில் ஈடுபட்ட தம்பதியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    பாலியல் தொழிலில் ஈடுபட்ட தம்பதியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு

    By தஞ்சாவூர்  |   Published on : 28th January 2015 03:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தஞ்சாவூர், ஜன. 27:   தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் அருகேயுள்ள சிந்தாமணி குடியிருப்பு பாரதி நகரைச் சேர்ந்தவர் ஏ. செந்தில்குமார் (43). இவரது மனைவி எம். ராஜம் (37). இருவரும் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை பகுதியில் வெளிமாநில இளம்பெண்களை வைத்து சட்டவிரோதமாக பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.

    அவர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தும், தொடர்ந்து அவர்கள் பாலியல் தொடர்பான தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.

    இதையடுத்து, அவர்களை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்ய, தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல்நிலைய ஆய்வாளர் எம்.எஸ். ஆரோக்கியதாஸ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி.தர்மராஜனுக்கு பரிந்துரை செய்தார். அவர், ஆட்சியர் என். சுப்பையனுக்கு பரிந்துரை செய்தார்.

     இதன்பேரில், செந்தில்குமார், ராஜம் தம்பதியை குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்து, செந்தில்குமாரை திருச்சி மத்திய சிறையிலும், ராஜத்தை திருச்சி மகளிர் தனிச்சிறையிலும் அடைத்திட ஆட்சியர் என். சுப்பையன் உத்தரவிட்டார். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai