Enable Javscript for better performance
வருங்காலங்களில் பல்வேறு பகுதிகளில் \\\"தஞ்சாவூர் திருவிழா\\\': ஆட்சியர் தகவல்- Dinamani

சுடச்சுட

    

    வருங்காலங்களில் பல்வேறு பகுதிகளில் "தஞ்சாவூர் திருவிழா': ஆட்சியர் தகவல்

    Published on : 28th January 2015 02:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வருங்காலங்களில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தஞ்சாவூர் திருவிழா நடத்தப்படும் என்றார் ஆட்சியர் என். சுப்பையன்.

    தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற தஞ்சாவூர் திருவிழாவின் நிறைவு விழாவில் அவர் மேலும் பேசியது:

    தஞ்சாவூரில் முதல் முறையாக தஞ்சாவூர் திருவிழா தொடங்கப்பட்டு, மூன்று நாள்கள் நடைபெற்றது. இந்த விழாவுக்குப் பொதுமக்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் மட்டுமல்லாமல், இதர பகுதிகளிலிருந்து ஏராளமானோர் பங்கேற்றனர்.

    ஆண்டுதோறும் நடத்தப்படவுள்ள இந்த விழா வரும் ஆண்டுகளில் தொடர்ந்து ஐந்து நாள்கள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் உத்தரவைப் பெற்று தஞ்சாவூர் மட்டுமல்லாமல், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் விழா நடத்தப்படும். இது, தஞ்சாவூர் மாவட்ட மக்களின் விழா. எனவே, மாவட்ட மக்கள் ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என்றார் சுப்பையன்.

    விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

    விழாவில் உணவுப் பொருள் வழங்கல் துறை ஆணையர் எஸ். கோபாலகிருஷ்ணன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் கு. தர்மராஜன், மேயர் சாவித்திரி கோபால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai