சுடச்சுட

  

  குடந்தை சோமேஸ்வரர், கைலாசநாதர் கோயில்களில் குடமுழுக்கு விழா

  By DN  |   Published on : 03rd November 2015 01:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கும்பகோணத்தில் சோமேஸ்வரர், கைலாசநாதர் கோயில் உள்பட 5 கோயில்களின் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

  கும்பகோணத்தில் 12 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகத் திருவிழா அடுத்த ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெற உள்ளது.

  இந்த விழாவை முன்னிட்டு கும்பகோணம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 69 கோயில்களிலும் திருப்பணி செய்யப்பட்டு குடமுழுக்கு நடத்தப்பட்டு வருகிறது.

  கும்பகோணம் மகாமகத் தொடர்புடைய சிவன் கோயில்களில் ஒன்றான சோமேஸ்வரர் கோயிலில் ரூ. 35 லட்சத்தில் திருப்பணிகள் செய்யப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது.

  இதேபோல் ரூ. 4.60 லட்சத்தில் திருப்பணி செய்யப்பட்ட மேலக்காவேரி கைலாசநாதர் கோயில், ரூ. 2 லட்சத்தில் திருப்பணி செய்யப்பட்ட ரெட்டிராயர்குளம் ஆஞ்சனேயர் கோயில், ரூ. 1.25 லட்சம் மதிப்பீட்டில் திருப்பணி செய்யப்பட்ட ஜெகன்நாதர் பிள்ளையார் கீழ வீதியில் உள்ள ஆண்டபிள்ளையார்கோயில், ரூ. 6.30 லட்சம் மதிப்பீட்டில் திருப்பணி செய்யப்பட்ட வரம்தரும்பெருமாள் மற்றும் திருமழிசை ஆழ்வார் கோயில் ஆகிய கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai