சுடச்சுட

  

  நவம்பர் 2-ல் மகா கும்பாபிஷேகம் சோமேஸ்வரர் கோயிலில் பந்தக்கால் முகூர்த்தம்

  By கும்பகோணம்  |   Published on : 14th October 2015 02:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கும்பகோணம்-தஞ்சை சாலையில் உள்ள வியாழசோமேஸ்வரர் கோயிலில் நவம்பர் 2-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு, திங்கள்கிழமை பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது.

  பல்வேறு சிறப்புடைய இக்கோயில் மகாமகம் தொடர்புடைய 12 சிவன் கோயில்களில் ஒன்றாகும். 2009-ல் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, தற்போது சுமார் ரூ. 10 லட்சத்தில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. நவம்பர் 2-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

  இதை முன்னிட்டு யாகசாலை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற உள்ளதால், மகாளய அமாவாசையான திங்கள்கிழமை (அக். 12) பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

  வரும் 26-ம் தேதி பூர்வாங்க பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா தொடங்கி நடைபெறவுள்ளது. வரும் 30-ம் தேதி காலை முதல்கால யாகசாலை பூஜை தொடங்கி  நடைபெறுகிறது. நவம்பர் 2-ம் தேதி வரை 6 கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று யாகசாலை பந்தலிலிருந்து கடங்கள் புறப்பட்டு விமான,

  ராஜகோபுர மகா கும்பாபிஷேகமும், தொடர்ந்து மூலவருக்கு மகாகும்பாபிஷேகம் நவம்பர் 2-ம் தேதி காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் நடைபெற உள்ளது.

  ஏற்பாடுகளை கோயில் தக்கார் மதியழகன், செயல் அலுவலர் நிர்மலாதேவி மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai