Enable Javscript for better performance
பாணபுரீஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு பந்தக்கால்- Dinamani

சுடச்சுட

    

    பாணபுரீஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு பந்தக்கால்

    By கும்பகோணம்,  |   Published on : 15th October 2015 03:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பாணபுரீஸ்வரர் திருக்கோயிலில் வரும் 26-ம் தேதி மகாகும்பாபிஷேகம் நடைபெற உள்ளதை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் புதன்கிழமை நடைபெற்றது.

    மகா பிரளயத்தின்போது மிதந்து வந்த அமுத கும்பத்தை நோக்கி பரமேஸ்வரன் இத்தலத்தில் கிராதமூர்த்தியாக எழுந்தருளி பாணம் விட்டபோது அமுதகும்பம் உடைந்து உலகம் தோன்றியதாக வரலாறு. பரமேஸ்வரன் இங்கு எழுந்தருளியதால் இத்தலம் பாணாதுறை என்றும், இறைவன் பாணபுரீஸ்வரராகவும் அழைக்கப்படுகிறார். இக்கோயிலில் அம்மன் சோமகலாம்பாளாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.

    சிம்மராசிகாரர்களுக்கு பரிகார தலம், மகாமக பெருவிழாவிற்கு முதன்மை கோயில் என்ற பெருமையுடையது ஆகும். சிறப்புடைய இக்கோயில் சுமார் ரூ. 25 லட்சத்தில் திருப்பணி செய்யப்பட்டு மகாகும்பாபிஷேகம் வரும் 26-ம் தேதி காலை 9 மணிக்கு மேல் 10.30-க்குள் நடைபெறுவதை முன்னிட்டு புதன்கிழமை பந்தக்கால் முகூர்த்தம் நடைபெற்றது.

    முன்னதாக விநாயகர் வழிபாடு செய்யப்பட்டு பந்தக்காலுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையுடன் முகூர்த்தம் நடைபெற்று பந்தக்கால் நடப்பட்டது. நிகழ்ச்சியில் கோயில் நிர்வாக அதிகாரி நிர்மலாதேவி, ஆலய அர்ச்சகர் துரைசாமி குருக்கள், நவநீதம்பிள்ளை, வேலன், மார்க்கெட் துரை மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai