சுடச்சுட

    

    அக். 22-ல் அமிர்தகலசநாதர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்

    By கும்பகோணம்  |   Published on : 17th October 2015 03:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மகாமக பெருவிழா தொடர்புடைய திருக்கலயநல்லூர் ஸ்ரீஅமிர்தவல்லி சமேத ஸ்ரீஅமிர்தகலசநாத சுவாமி திருக்கோயிலில் வரும் 22-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

    பல்வேறு சிறப்புடைய இக்கோயிலில் தமிழக அரசின் நிதியுதவியுடன் புனரமைப்புப் பணிகள் நடைபெற்றுள்ளது. வரும் 22-ம் தேதி காலை 8 மணிக்கு மேல் 9.15 மணிக்கள் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

    இதை முன்னிட்டு, வரும் 19ம் தேதி பூர்வாங்க பூஜைகளுடன் விழா தொடங்குகிறது.

    20-ம் தேதி முதல்கால யாகசாலை பூஜை தொடங்கி, 22-ம் தேதி முடிய நான்கு கால யாகசாலை பூஜைகள் நடைபெறுகின்றன. தொடர்ந்து புனித தீர்த்தங்கள் அடங்கிய கலசங்கள் புறப்பட்டு விமான ராஜகோபுர பரிவார மூர்த்திகளை சென்றடைந்து மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து, அமிர்தவல்லி சமேத அமிர்தகலசநாத சுவாமிக்கும் மற்றும் பரிவார மூலஸ்தான மூர்த்திகளுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அன்று மாலை மகா அபிஷேகம் நடைபெறுகிறது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai