கும்பகோணம் அஞ்சனேயர் கோயிலில் அக். 22-ல் மகாசம்ப்ரோக்ஷணம்

கும்பகோணம் பெரிய கடைத்தெருவில் உள்ள அஞ்சனேயர் கோயிலில் மகாசம்ப்ரோக்ஷணம் அக். 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி பூர்வாங்க பூஜைகள் திங்கள்கிழமை தொடங்கிய

கும்பகோணம் பெரிய கடைத்தெருவில் உள்ள அஞ்சனேயர் கோயிலில் மகாசம்ப்ரோக்ஷணம் அக். 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி பூர்வாங்க பூஜைகள் திங்கள்கிழமை தொடங்கியது.

கும்பகோணம் ராமசாமி கோயிலில் பட்டாபிஷேக கோலத்தில் சீதாதேவியுடன் எழுந்தருளியுள்ள ராமபிரானுக்கு வடக்கே பெரியகடைத் தெருவில் நடுநாயகமாக கோயில் கொண்டு ஆஞ்சநேயர் அருள்பாலித்து வருகிறார். வேறு எங்கும் இல்லாத வகையில் தனி சிறப்பாக சாரங்கபாணி சுவாமி, சக்கரபாணிசுவாமி, ராமசுவாமி ஆகிய மூன்று பெருமாளுக்கும் அந்தரங்க தாசனாக எழுந்தருளியுள்ளார். இந்த மூன்று பெருமாள்களும் திருவீதி எழுந்தருளும்போது இந்த ஆஞ்சநேயருக்கு சடாரி மரியாதை கொடுப்பது இன்றும் நடைமுறையில் உள்ளது.

இத்தகைய சிறப்புகள் பெற்ற இக்கோயிலில் மகாசம்ப்ரோக்ஷணம் அக். 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து காலை 10 மணிக்கு பொதுஜனசேவையும், இரவு ஆஞ்சநேய சுவாமியின் திருவீதியுலா புறப்பாடும் நடைபெற உள்ளன. ஏற்பாடுகளை கோயில் செயல்அலுவலர் கலைவாணி, தக்கார் மதியழகன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com