சுடச்சுட

  

  கும்பகோணத்தில்  ஏகாம்பரேஸ்வரர், அமிர்தகலசநாதர் கோயில்களில் குடமுழுக்கு விழா

  By கும்பகோணம்  |   Published on : 23rd October 2015 05:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கும்பகோணம் ஏகாம்பரேஸ்வரர் கோயில், சாக்கோட்டை அமிர்தகலசநாதர் கோயில், பெரிய கடைத்தெரு அஞ்சனேயர் கோயில் உள்பட நான்கு கோயில்களில் வியாழக்கிழமை குடமுழுக்கு விழா நடைபெற்றது.

  கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகாமக விழா மகாமக குளத்தில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவை முன்னிட்டு மகாமக தொடர்புடைய 12 சிவன் கோயில்கள், 5 வைணவ கோயில்கள் உள்பட மொத்தம் 69 கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்திட ரூ. 12.50 கோடி மதிப்பீட்டில் திருப்பணி தொடங்கப்பட்டது.

  இதில் அறநிலையத் துறையின் மானியமாக ரூ. 10 கோடியும், உபயதாரர்கள் மூலம் ரூ. 2.50 கோடியும் செலவிடப்பட்டு திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. திருப்பணிகள் நிறைவடைந்த கும்பகோணம் சாரங்கபாணி கோயில், ராமசாமி கோயில், ராஜகோபாலசுவாமி கோயில் உள்பட 15 கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்று விட்டன. மீதமுள்ள 54 கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அதில் மகாமக திருவிழா தொடர்புடைய கும்பகோணம் ஏகாம்பரேஸ்வரர் கோயில், சாக்கோட்டை அமிர்தகலசநாதர் கோயில், பெரிய கடைத்தெரு அஞ்சனேயர் கோயில் ஆகிய 3 கோயில்களில் ரூ. 27.84 லட்சம் மதிப்பீட்டில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றன. அத்துடன் கும்பகோணம் டாக்டர் மூர்த்தி சாலையில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான வரசித்தி விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து மகாமக பெருவிழா தீர்த்தவாரியுடன் தொடர்புடைய கோயில்களான கும்பகோணம் காளஹஸ்தீஸ்வரர், அபிமுகேஸ்வரர், ஆதிகம்பட்ட விஸ்வநாதர், கொட்டையூர் கோடீஸ்வரர், ஆதிவராகப்பெருமாள், பகவத்விநாயகர்கோயில், வட்டி பிள்ளையார் கோயில், யானையடி அய்யனார் கோயில், ஜெயவீர ஆஞ்சனேயர் கோயில், தைக்கால் மதகடி திரவுபதி அம்மன் கோயில், பாணாதுறை வரசித்தி விநாயகர் கோயில், கொத்தன் ஒத்ததெரு கோடியம்மன் தெட்சிணாமூர்த்தி கோயில், மேலக்காவேரி படைவெட்டி மாரியம்மன் ஆகிய கோயில்களில் அக். 26-ல் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.  இதைத் தவிர மீதமுள்ள 37 கோயில்களில் நவம்பர் மாதத்துக்குள் கும்பாபிஷேகம் நடத்திட அறநிலையத் துறையினர் முடிவு செய்து பணிகளை துரிதப்படுத்தியுள்ளனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai