Enable Javscript for better performance
குடந்தை ராமசாமி கோயிலில் இன்று கலச ஊர்வலம்- Dinamani

சுடச்சுட

    

    குடந்தை ராமசாமி கோயிலில் இன்று கலச ஊர்வலம்

    By கும்பகோணம்  |   Published on : 04th September 2015 03:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கும்பகோணம் ராமசாமி கோயில் குடமுழுக்கையொட்டி வெள்ளிக்கிழமை காலை கலச ஊர்வலம் நடைபெற உள்ளது.

    வருகிற மகாமக திருவிழாவை முன்னிட்டு சுமார் ராம சரணம் அறக்கட்டளை மற்றும் அறநிலையத்துறை நிதியுதவியுடன் இக்கோயிலில் உள்ள ராஜகோபுரம், கட்டை கோபுரம், ராமர் விமானம், தெற்கு விமானம் உள்ளிட்ட 4 விமானங்களுக்கு திருப்பணிகள் நிறைவுற்றன. வரும் 9-ம் தேதி குடமுழுக்கு நடைபெறவுள்ளது.

    கோயிலில் மூலவர் கோபுரக் கலசம் கும்பகோணம் ராயா குழுமம் சார்பில் வியாழக்கிழமை உபயமாக வழங்கப்பட்டது. மூன்றரை அடி உயரம் கொண்ட, தங்கமுலாம் பூசப்பட்ட ரூ. 8 லட்சத்திலான கலசத்திற்கு சிறப்பு பூஜை நடைபெற்றது.

    இதில் உபயதாரர் ராயாகோவிந்தராஜன் குடும்பத்தினர், சிட்டி யூனியன் வங்கி தலைவர் பாலசுப்பிரமணியன், உதவி பொது மேலாளர் பாலசுப்பிரமணியன் குடும்பத்தினர், டாக்டர் தியாகராஜன், மெர்குரி தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதையடுத்து வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு புதிதாக வடிவமைக்கப்பட்ட ரதம், தங்கமுலாம் பூசப்பட்ட புதிய கொடிமரம், ராஜகோபுர கலசங்கள், மூலவர் கோபுர கலசம்,தங்க முலாம் பூசப்பட்ட கருட வாகனம், படிச்சட்டங்கள் ஆகியவற்றின் ஊர்வலம் நடைபெறவுள்ளது. 9-ம் தேதி அதிகாலை 5 மணி முதல் 6.45 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai