Enable Javscript for better performance
சாரங்கபாணி சுவாமி திருக்கோயிலில் சித்திரைப் பெருவிழா தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    சாரங்கபாணி சுவாமி திருக்கோயிலில் சித்திரைப் பெருவிழா தொடக்கம்

    By கும்பகோணம்  |   Published on : 15th April 2016 09:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கும்பகோணம் ஸ்ரீ சாரங்கபாணி சுவாமி திருக்கோயிலில் சித்திரைப் பெருவிழா கொடியேற்றத்துடன் வியாழக்கிழமை தொடங்கியது.

    மிகப்பழமை வாய்ந்த இத்தலத்தில் அருள்பாலித்து வரும் சாரங்கபாணிசுவாமி, சக்கரபாணி சுவாமி சமேதராய் கண்டருளும் சித்திரைப் பெருவிழா வியாழக்கிழமை காலை 10மணிக்கு மேல் 11மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இரவு பெருமாள் உபயநாச்சியார்களுடன் தங்க இந்திர விமானத்தில் வீதிப்புறப்பாடு நடைபெற்றது. ஏப். 30 ஆம் தேதி வரை நடைபெற உள்ள விழாவில் காலை,இரவு என இரு வேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் வீதிப்புறப்பாடு நடைபெற உள்ளது. இவ்விழாவின் முக்கியவிழாவான திருத்தேரோட்டம் ஏப். 22 ஆம் தேதி காலை 9.15 மணிக்கு மேல் 9.45 மணிக்குள் தேர் வடம்பிடிக்கப்பட்டு தேரோட்டம் நடைபெறுகிறது. முன்னதாக அன்று அதிகாலை 4.30 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் பெருமாள் உபயநாச்சியார்களுடன் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று இரவு 10மணிக்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோயில்தக்கார் மதியழகன், நிர்வாகஅதிகாரி நிர்மலாதேவி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள், உபயதாரர்கள் இணைந்து செய்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai