Enable Javscript for better performance
சுவாமிநாதசுவாமி கோயிலில் திருப்படித் திருவிழா- Dinamani

சுடச்சுட

    

    சுவாமிநாதசுவாமி கோயிலில் திருப்படித் திருவிழா

    By கும்பகோணம்  |   Published on : 15th April 2016 08:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சுவாமிமலை ஸ்ரீ சுவாமிநாதசுவாமி கோயிலில் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வியாழக்கிழமை திருப்படி திருவிழா நடைபெற்றது.

    முருகனின் ஆறுபடை வீடுகளுள் நான்காவது படைவீடாக இக்கோயில் திகழ்கிறது.

    இக்கோயிலில் தமிழ் வருட தேவதைகள் தங்கள் பெயர்களுடன் படிகளாக அமர்ந்து சுவாமிநாத சுவாமிக்கு சேவை செய்து வருகிறது. இந்த கோயிலில் தமிழ்புத்தாண்டு மற்றும் ஆங்கில புத்தாண்டு ஆகிய நாட்களில் தமிழ் வருட தேவதைகள் பெயருடன் அமைந்துள்ள  படிகளுக்கு திருப்படித் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி தமிழ்புத்தாண்டு தினமான வியாழக்கிழமை (14 ஆம் தேதி) சித்திரை மாதம் பிறந்ததை முன்னிட்டு திருப்படித் திருவிழா நடைபெற்றது. இத்திருவிழாவை முன்னிட்டு கோயிலில் அமைந்துள்ள 60 திருப்படிகளுக்கும் விளக்குகள் ஏற்றி சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு நடைபெற்றது.

    இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

    இரவு 7 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூஜைகளுடன் சித்திரைப் பெருந்திருவிழாவின் பூர்வாங்க பூஜைகள் தொடங்கி நடைபெற்றது.

     ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai