Enable Javscript for better performance
மே 8-ல் முதல்வர் தஞ்சை வருகை- Dinamani

சுடச்சுட

    

    தமிழக முதல்வர் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக தஞ்சாவூருக்கு மே 8-ம் தேதி வருகிறார் என்றார் அதிமுக தஞ்சாவூர் தெற்கு மாவட்டச் செயலரும், வீட்டுவசதி, நகர்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சரும், ஒரத்தநாடு தொகுதி அதிமுக வேட்பாளருமான ஆர். வைத்திலிங்கம்.

    ஒரத்தநாட்டில் புதன்கிழமை இரவு நடைபெற்ற அதிமுக தொகுதி செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியது:

    தஞ்சை மாவட்டத்தில் தமிழக முதல்வர் ஏராளமான திட்டங்களை நிறைவேற்றியுள்ளார்.  ஒரத்தநாட்டில் கால்நடை மருத்துவக் கல்லூரி, வேளாண்மைக் கல்லூரி, பேராவூரணியில் கலை, அறிவியல் கல்லூரி, செங்கிப்பட்டியில் பொறியியல் கல்லூரி, திருவையாறில் ஐ.டி.ஐ., பாபநாசத்தில் பாலிடெக்னிக் கல்லூரி, திருவோணத்தில் ஐ.டி.ஐ. என கல்விக்கூடங்களை ஏற்படுத்தியுள்ளார். ஒரத்தநாடு தொகுதியிலும் ஏராளமான வளர்ச்சிப் பணிகள் செய்யப்பட்டுள்ளன. 

    தமிழக முதல்வர் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக தஞ்சாவூருக்கு மே 8-ம் தேதி வருகிறார். அவர் தஞ்சை,நாகை,திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். மேலும் அவரது பேச்சை பல்வேறு இடங்களில் நேரடியாக ஒளிபரப்பும் வகையில் பிரசார வாகனங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்றார் வைத்திலிங்கம். ஒரத்தநாடு தொகுதி செயலர் கோ. தேவதாஸ் தலைமை வகித்தார்.

    அதிமுக விவசாயப் பிரிவு தலைவர் துரை. கோவிந்தராஜன், மக்களவை உறுப்பினர் கு. பரசுராமன், மாவட்டப் பால் வளத் தலைவர் ஆர். காந்தி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் அமுதா ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai