Enable Javscript for better performance
234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னம்: அமைச்சர் பெருமிதம்- Dinamani

சுடச்சுட

    
    admk-logo

    வரும் தேர்தலில் 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் வேட்பாளர்களை நிறுத்தி சாதனை படைத்திருக்கிறார் முதல்வர் ஜெயலலிதா என்றார் அமைச்சர் ஆர். வைத்திலிங்கம்.

    பேராவூரணியில் புதன்கிழமை நடைபெற்ற சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்தார்.  சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலர் குழ. சுந்தரராஜன் தலைமை வகித்தார். தஞ்சை மக்களவை உறுப்பினர் கு. பரசுராமன், பேராவூரணி சட்டப்பேரவை வேட்பாளர் மா. கோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முன்னாள் மாவட்டச் செயலர் கார்த்திகேயன், ஒன்றியக் குழுத் தலைவர் சாந்தி அசோக்குமார், மாவட்ட மாணவரணி இணைச் செயலர் ஆர்.பி. ராஜேந்திரன், மாவட்ட மாணவரணி துணைத் தலைவர் எஸ்.எம். நீலகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பேராவூரணி ஒன்றியச் செயலர் உ. துரைமாணிக்கம் வரவேற்றார். நகரச் செயலர் வி.என். பக்கிரிசாமி நன்றி கூறினார்.

    பட்டுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற இத்தொகுதி அதிமுக செயல்வீரர்களின் ஆலோசனைக் கூட்டத்தில், 5 முறை தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி தஞ்சை மாவட்டத்துக்கு எதுவும் செய்யவில்லை. ஆனால் ஜெயலலிதா எண்ணற்ற பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளார். ஜெயலலிதா மீண்டும் முதல்வரானால் பட்டுக்கோட்டை அருகே 364 ஏக்கர் பரப்புள்ள செல்லிக்குறிச்சி ஏரி தூர் வாரப்பட்டு, மதகு, அணைகள் கட்டப்படும் என்றார் அவர்.

    கூட்டத்துக்கு பட்டுக்கோட்டை தொகுதிச் செயலர் பி.என். ராமச்சந்திரன் தலைமை வகித்தார். தஞ்சை மக்களவை உறுப்பினர் கு. பரசுராமன் முன்னிலை வகித்தார். மதுக்கூர் ஒன்றியத் தலைவர் துரை. செந்தில் வரவேற்றார். கூட்டத்தில் பட்டுக்கோட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் சி.வி. சேகர், நகர்மன்றத் தலைவர் எஸ்.ஆர். ஜவஹர்பாபு, ஒன்றியச் செயலர் பி. சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பட்டுக்கோட்டை நகரச் செயலர் சுப. ராஜேந்திரன் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai