சுடச்சுட

  

  கும்பகோணம் அகோர வீரபத்திர சுவாமி கோயிலில் பிப். 12-ல் கும்பாபிஷேகம்

  By கும்பகோணம்,  |   Published on : 09th February 2016 04:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கும்பகோணம் வீர சைவ பெரிய மடத்துக்குச் சொந்தமான அகோர வீரபத்திரசுவாமி கோயிலில் பிப். 12ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

  சிவபெருமானிடம் கங்கா தேவி ஆன்மாக்கள் தன்னிடம் கழித்த பாவச் சுமையைப் போக்க வேண்டி நின்றாள். அதற்கு சிவபெருமான் கும்பகோணத்தில் உள்ள மகாமகக் குளத்தில் மகாமக நாளில் நீராட பாவங்கள் நீங்கும் எனக் கூறி, கங்கை முதலான புண்ணிய நதிகளுக்கு துணையாக தக்கனின் வேள்வியை அழித்த ஈசனின் அம்சமான வீரபத்திரரை உடன் அனுப்பி வைத்தார்.

  நவகன்னியருடன் பூமிக்கு வந்தடைந்த வீரபத்திரர் சுவாமி மகாமக குளக்கரையின் வடகரையில் எழுந்தருளியபோது, சிவபெருமானே குருமூர்த்தியாக எழுந்தருளி அகோர வீரபத்திரருக்கு தீட்சையும், இலிங்கதாரணமும், ஆச்சாரிய அபிஷேகமும் செய்வித்து, வீரசிங்காதன பீடத்தில் அமர்த்தி, வீரசைவ குருவருளைக் கொண்டு வீரசைவத்தை உலகத்தில் பரப்ப அருளாணை வழங்கினார் என்பது புராண வரலாறு.

  அதன்படி கும்பகோணத்தில் கோயில் கொண்டுள்ள அகோர வீரபத்திர சுவாமி கோயிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு வரும் 12 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

  மயிலம் பொம்மபுர வீரசைவ ஆதீனத்தின் 20ஆவது பட்டம் சிவஞானபாலய சுவாமிகள் தலைமையில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai