சுடச்சுட

  

  மகாமக விழா குடந்தை கோயில்களில் நாளை பந்தக்கால் முகூர்த்தம்

  By கும்பகோணம்  |   Published on : 23rd January 2016 05:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கும்பகோணத்தில் மகாமக விழா தொடர்புடைய 12சிவன் கோயில்களிலும், 5 வைணவத் திருக்கோயில்களிலும் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 24) மகாமக விழாவுக்கான பந்தக்கால் முகூர்த்தம் நடைபெறவுள்ளது என இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் மயிலாடுதுறை மண்டல இணை ஆணையர் கஜேந்திரன் தெரிவித்தார்.

  கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை அவர் கூறியது:

  கும்பகோணத்தில் மகாமக பெருவிழா தொடர்புடைய சிவாலயங்களில் பிப். 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள்கள் விழா நடைபெற உள்ளது.

  இதேபோல், மகாமக தொடர்புடைய வைணவ ஆலயங்களில் பிப்.14-ம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கி நடைபெற உள்ளது. மகாமக விழாவின் முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி பிப். 22-ம் தேதி காலை 12 மணிக்கு மேல் 1.30 மணிக்குள் சிவாலயங்களின் தீர்த்தவாரி மகாமக குளத்திலும், வைணவ திருக்கோயில்களின் தீர்த்தவாரி காவிரி ஆற்றிலும் நடைபெற உள்ளது. மகாமகத்தை முன்னிட்டு 48 ஆண்டுகளுக்குப் பிறகு தேரோட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

  பிப். 21, 22 ஆகிய இரு நாள்களும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்து கோயில்களின் நடைகளும் திறந்திருக்கும். மகாமகத்தையொட்டி, மகாமக விழா தொடர்புடைய கோயில்களில் வரும் ஞாயிற்றுக்கிழமை பந்தக்கால் முகூர்த்தம் நடைபெறவுள்ளது. பிப். 21-ம் தேதி அபிமுகேஸ்வராó கோயில் மற்றும் நாகேஸ்வராó கோயில் தேரோட்டம் நடைபெறும். மகாமக விழாவை முன்னிட்டு, பிப்ரவாõ 22-ம் தேதி ஆதிகும்பேஸ்வரர் கோயிலின் ஐந்து தேர்களின் தேரோட்டம் நடைபெற உள்ளது.

  ஆதிகும்பேஸ்வராó கோயிலில் ஜன. 27-ம் தேதி டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த மடாதிபதிகள் மற்றும் ஆதீனங்களுடன் மகாமக பெருவிழா தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெறுகிறது என்றார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai