சுடச்சுட

  

  குடந்தையில் 10 கோயில்களில் மகா கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு

  By கும்பகோணம்  |   Published on : 30th January 2016 01:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கும்பகோணத்தில் 10 கோயில்களில் வெள்ளிக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

  கும்பகோணத்தில் மகாமக விழா, பிப்ரவரி 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெறவுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி பிப். 22-ம் தேதி நடைபெறுகிறது.

  மகாமக விழாவை முன்னிட்டு, விழா தொடர்புடைய பல்வேறு கோயில்களில் திருப்பணிகள் செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்று வருகிறது. இதன்படி,   இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான 10 கோயில்களில் வெள்ளிக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

  கும்பகோணம் மேலக்காவேரி ஸ்ரீ பிரகன்நாயகி சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் மற்றும் திருக்குளம் ரூ. 60.70 லட்சத்தில் திருப்பணி செய்யப்பட்டு, கோயில் கும்பாபிஷேகம் காலை 8.15 மணிக்கு மேல் 8.45 மணிக்குள் நடைபெற்றது.

  இதேபோல், கும்பகோணம் மல்லுக செட்டித்தெருவில் உள்ள ஸ்ரீசந்தான கோபாலகிருஷ்ணசுவாமி திருக்கோயில் மற்றும் எல்லையம்மன் கோயில் ஆகியவை ரூ. 20 லட்சத்து 4 ஆயிரம் மதிப்பீட்டில் திருப்பணி செய்யப்பட்டு காலை 6.45 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

  பெரிய கடைத்தெருவிலுள்ள ஸ்ரீ சரநாராயணப் பெருமாள் திருக்கோயில் ரூ. 24 லட்சத்தில் திருப்பணி செய்யப்பட்டு, காலை 9 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் கும்பாபிஷேகமும், தாராசுரம் ஸ்ரீமுனியாண்டி திருக்கோயில் ரூ. 26.10 லட்சத்தில்  திருப்பணி செய்யப்பட்டு காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மகா கும்பாபிஷேகமும், மேலக்காவேரி ஸ்ரீயானையடி அய்யனார் திருக்கோயில் பழமை மாறாமல் ரூ. 3.80 லட்சத்தில் திருப்பணி செய்யப்பட்டு, காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள்ளும், மேலக்காவேரி யானையடி ஸ்ரீ பிள்ளையார்கோவில் ரூ. 2.80 லட்சத்தில் புனரமைக்கப்பட்டு காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள்ளும், மாதுளம்பேட்டை ஸ்ரீகாளியம்மன் கோயில் ரூ. 2.35 லட்சத்தில் திருப்பணி செய்யப்பட்டு  காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள்ளும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

  இதேபோல், கும்பகோணம் அருகே பட்டீஸ்வரம் ஸ்ரீஞானம்பிகா சமேதஸ்ரீ தேனுபுரீஸ்வரர் திருக்கோயில் ரூ. 1.20 கோடியில் திருப்பணி செய்யப்பட்டு மகா கும்பாபிஷேகம் காலை 9.30 மணிக்கு மேல் 10.25 மணிக்குள் நடைபெற்றது.

  பழையாறை ஸ்ரீ சோமகமலாம்பிகா சமேத ஸ்ரீ சோமநாத சுவாமி திருக்கோயில் ரூ. 1.24 கோடியில் திருப்பணி செய்யப்பட்டு மகாகும்பாபிஷேகம் காலை 9.30 மணிக்கு மேல் 10.25 மணிக்குள் நடைபெற்றது.

  இந்த 10 கோயில்களும் ரூ. 3.83 கோடியில் திருப்பணிகள் செய்யப்பட்டு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai